மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து வேளாங்கண்ணி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானதை கண்டித்து வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகை கடைத்தெருவில் நாகை - திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முருகையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளி சங்க ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் பால்சாமி, கிளை செயலாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

20 பேர் கைது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது சாலைமறியலில் ஈடுபட்ட 20 பேரை கீழையூர் போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக நாகை - திருத்துறைப்பூண்டி சாலையில் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...