மயிலாடுதுறை,
பொது வினியோக திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு அரிசி வினியோகம் செய்வதற்காக மத்திய தொகுப்பில் இருந்து அரிசி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் சுல்தானாபேட்டையில் இருந்து பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வினியோகிப்பதற்காக சரக்கு ரெயில் மூலம் 1,317 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டன. அந்த சரக்கு ரெயில் நேற்றுமுன்தினம் மயிலாடுதுறை ரெயில் நிலையம் வந்தடைந்தது. சரக்கு ரெயிலில் 21 பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் இறக்கப்பட்டு 69 லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும், சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் சேமிக்கப்பட்டன.