ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 719 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றினை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தும், அதனை மதிக்காமல் பொதுமக்கள் வழக்கம் போல் வெளியில் சுற்றித் திரிகிறார்கள். இதனால் நோய் தடுப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடுகிறது.
15 பேர் பலி
நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் 719 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,381 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றின் காரணமாக நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 15 பேர் பலியாகி உள்ளனர். ஒரேநாளில் 15 பேர் இறந்திருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.