ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 192 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 12 ஆயிரத்து 691 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து ஒருவர் மட்டுமே வீடு திரும்பி உள்ளார். இதுவரை 9 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2 ஆயிரத்து 584 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 151 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருப்பதாகவும் ஒருசில நாட்களில் மீண்டும் பணிக்கு திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல ராமநாதபுரம் சுகாதார துணை இயக்குனர் பொற்கொடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.