மதுரை, மே.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சோமு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுபானம் ஏற்றி செல்லும் வாகனத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பாலசந்தர் (வயது 27), முத்துப்பாண்டி (35) ஆகியோர் வீட்டில் மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்றது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 37 மது பாட்டில்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.