மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி 500 பேருக்கு தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். நேற்று 500 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 43 வயதுடய ஆண் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவர் கடந்த 3-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் 4-ந் தேதி இறந்தார்.

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 50 வயது ஆண். காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக கடந்த 26-ந் தேதி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்ததும் பலன் அளிக்காமல் கடந்த 5-ந் தேதி அவர் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.

500 பேருக்கு தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 491 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வரையில் 17 ஆயிரத்து 434 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 14 ஆயிரத்து 843 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 451 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...