மாவட்ட செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

தென்காசி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியானார்கள்.

தென்காசி, மே:

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 346 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 131-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 85 பேர் குணமடைந்து உள்ளனர். 2 ஆயிரத்து 802 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 62 வயது பெண் மற்றும் தென்காசி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்த 66 வயது முதியவர் நேற்று இறந்தனர். பலியானோர் எண்ணிக்கை 244-ஆக உயர்ந்துள்ளது