மும்பை,
மும்பை ஜோகேஸ்வரியில் 6 வயது சிறுமி குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 4ந் தேதி சிறுமி வீட்டருகே உள்ள கடைக்கு சென்றாள். ஆனால் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்தநிலையில் மறுநாள் ஆரேகாலனி பகுதியில் சிறுமி ஆடையின்றி, அலங்கோலமான நிலையில் மீட்கப்பட்டாள். சிறுமிக்கு உடலில் காயங்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் சிறுமியை அருகில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது சிறுமி கடத்தி, கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ஸ்ரீனிவாஸ் (வயது 45) என்பவர் சிறுமியை கடத்தி, கற்பழித்ததை கண்டுபிடித்தனர். பின்னர் ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில் ஸ்ரீனிவாஸ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.