பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதி பகுதியில் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நேற்று மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென்று சோதனையிட்டனர். இதில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பார்மலின் ரசாயனம் தடவி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடைகளில் இருந்த 200 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை பினாயில் ஊற்றி குப்பைத் தொட்டியில் கொட்டினர். இந்த மீன்களை விற்ற கடைக்காரர்களிடம் நகராட்சி சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.