மாவட்ட செய்திகள்

216-வது முறையாக மனுத்தாக்கல் `

தேர்தல் மன்னன் பத்மராஜன் 216-வது முறையாக மனுத்தாக்கல் மேட்டூர், எடப்பாடி தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

தினத்தந்தி

மேட்டூர்,

மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன்(வயது60). பழைய டயர்களை புதுப்பித்து விற்கும் தொழில் செய்து வருகிறார். 8-ம் வகுப்பு வரை படித்த இவர் உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம். எம்.எல்.ஏ., எம்.பி., ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் முக்கிய பிரமுகர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டு உள்ளார். எனவே இவர் தேர்தல் மன்னன் என்று மேட்டூர் மக்களால் அழைக்கப்படுகிறார். ஆனால் இதுவரை எந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றதே இல்லை. இருப்பினும் விடாமுயற்சியுடன் தேர்தலில் போட்டியிடுவதை குறிக்கோளாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், பத்மராஜன் மேட்டூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட நேற்று உதவி கலெக்டர் சரவணனிடம், தனது வேட்பு மனுவ தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் எடப்பாடி தொகுதியிலும் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். அது அவருக்கு 216-வது மனுத்தாக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை