மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கு

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவருடைய மகன் செல்வராஜ் (வயது 39). இவர் சின்னகண்ணுபுரம் பகுதியில் வந்த போது, அங்கு வந்த தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த கருப்பசாமி மகன் உதயமூர்த்தி (21), நடராஜபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் கண்ணபெருமாள் என்ற கண்ணன் (19), கீதாஜீவன் நகரை சேர்ந்த சண்முகவேல் மகன் சிலுவைபிச்சை ராபின் என்ற ராபின்சன் (26), சோட்டையன்தோப்பை சேர்ந்த மரியசுடலை மகன் வினோத் என்ற வினோத்ராஜ் (31) ஆகிய 4 பேரையும் சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், உதயமூர்த்தி, கண்ணபெருமாள் என்ற கண்ணன் (19), சிலுவைபிச்சை ராபின் என்ற ராபின்சன் (26), வினோத் என்ற வினோத்ராஜ் (31) ஆகிய 4 பேரை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார். இந்த ஆண்டு இதுவரை கடந்த 45 நாட்களில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சம்மந்தப்பட்ட 10 பேர், போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் உட்பட 27 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.