மாவட்ட செய்திகள்

புளியங்குடி அருகே கார் மோதி 4 பேர் படுகாயம்

புளியங்குடி அருகே கார் மோதி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அச்சன்புதூர்:

புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுபவர் சங்கரி. இவர் சம்பவத்தன்று கடையநல்லூரில் இருந்து புளியங்குடியை நோக்கி கார் ஓட்டி வந்தார்.

புளியங்குடி புதிய எலுமிச்சை மார்க்கெட் அருகே வந்தபோது அச்சாலை வழியாக இருசக்கர வாகனங்ககளில் வந்த ஆத்துவழியைச் சேர்ந்த பிரதீஸ் (வயது 23), கனகராஜ் (31), சிந்தாமணியை சேர்ந்த நாராயணன் (39), புன்னையாபுரத்தை சேர்ந்த தர்மர் (62) ஆகியோர் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவிக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.