மாவட்ட செய்திகள்

தேர்தல்களில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட தீபம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் டிசம்பர்3 இயக்கம் சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முனிக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் குமரவேல் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

விழாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர தடையற்ற சூழலை உருவாக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை ரூ.ஆயிரத்தில் இருந்து மாதம் ரூ.3 ஆயிரமாகவும், பராமரிப்பு உதவித்தொகையினை ரூ.1,500ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு என்றிருப்பதை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் மாற்றுத் திறளாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட பொருளாளர் நாராயணன், மாவட்ட இணை செயலாளர்கள் குமார், நாராயணன், மாவட்ட துணைத்தலைவர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்