புதுச்சேரி,
புதுவை வாணரப்பேட்டை பழைய ரெயில்வே குடியிருப்பு அருகே உள்ள இருண்ட பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு இருளில் பதுங்கி இருந்த சிலர் ஓட முயற்சித்தனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 3 வீச்சரிவாள்களையும் பறிமுதல் செய்தனர்.
6 பேர் கைது
விசாரணையில் அவர்கள் பிரான்சுவா தோப்பை சேர்ந்த ஜான்போஸ்கோ, திப்புராயப்பேட்டை ஜான்சன், ஜெயராம்செட்டியார் தோட்டம் புரூனோ ராஜீ, ராசு உடையார் தோட்டத்தை சேர்ந்த சைமன் பால்ராஜ், வாணரப்பேட்டை தீனதயாளன், முதலியார்பேட்டை மில் வீதியை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது.
அவர்கள் கோலாஸ் நகர் பகுதியில் வசிக்கும் வசதிபடைத்த நபர்களிடம் கூட்டுக் கொள்ளை அடிக்க திட்டமிட்டு அந்த பகுதியில் சுற்றித் திரிந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.