சிவகங்கை
சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்தவர் வைரமணி(வயது 45). இவரது மனைவி அருணாதேவி(36). அருணாதேவி மார்கழி மாதமாக இருப்பதால் தற்போது தினசரி அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருவார். நேற்று அதிகாலை 6 மணி அளவில் அவர் பெருமாள் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக வீட்டிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தார்.
அவர் கோவிலின் அருகே வரும்போது அந்த வழியில் நின்று கொண்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், அருணாதேவி அணிந்து இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். சிவகங்கை நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமரன் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.