மாவட்ட செய்திகள்

8 இறைச்சிக்கடைகளுக்கு அபராதம்

கீழ்பென்னாத்தூரில் 8 இறைச்சிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் 8 இறைச்சிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கீழ்பென்னாத்தூரில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. கீழ்பென்னாத்தூர், சோமாசிபாடி ஆகிய ஊர்களில் தாசில்தார் சக்கரை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது முழு ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்த 8 இறைச்சிக்கடைகளுக்கு அபராதம் விதித்து, மொத்தம் ரூ.26 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், முனீஸ்வரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது முகக் கவசம் அணியாமல் வந்த 5 பேருக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்து மொத்தம் ரூ.2 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது.