கொரோனா ஊரடங்கை மீறி தேவை இன்றி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர். இந்தநிலையில் பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் பரங்கிமலை தபால் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி அனாவசியமாக சுற்றிய 400-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அதை ஓட்டி வந்தவர்கள் மீது தொற்று நோய் பரப்பியதாக வழக்குப்பதிவு செய்து அனுப்பி வைத்தனர்.