மாவட்ட செய்திகள்

கார்-லாரி மோதல்: தம்பதி, 1½ வயது குழந்தை சாவு

காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தையுடன் தம்பதி பலியானார்கள்.

துமகூரு: ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவை சேர்ந்தவர் ஆஷிக்(வயது 42). இவரது மனைவி நாசியா(32). இந்த தம்பதிக்கு சையது(1) என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் நேற்று ஆஷிக், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சன்னப்பட்டணாவில் இருந்து சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹொன்னமாச்சனஹள்ளி பகுதியில் கார் சென்றபோது அந்த வழியாக வந்த லாரியும், காரும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஆஷிக், நாசியா, குழந்தை சையது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து உலியூர்துர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்