சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க .கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர்.பெ.ஜான்பாண்டியன் களமிறங்கி சூறாவளி சுற்றுப்பயணமாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் 58-வது வார்டு பகுதியான அவதானா பாப்பையா ரோடு, காளத்தியப்பா ரோடு ,வடமலை தெரு, வெங்கடாச்சலம் தெரு, வள்ளுவன் தெரு, முத்து தெரு, காராயப்ப தெரு, முக்தால் தெரு, வைகாரன் தெரு, நாராயணகுரு சாலை, நேவுல் மருத்துவமனை 13-வது முதல் 1-வது சந்து, பெரியண்ணா மேஸ்திரி தெரு, வீரசாமி தெரு, திருவெங்கடம் தெரு, கடப்பா ரங்கய்யா தெரு, அட்கின்சன் சாலை, ஸ்டிங்கர்ஸ் சாலை, சுப்பையா தெரு, வி.வி.கோவில் தெரு, வாத்தியார் கந்தப்பா தெரு, சாமிபிள்ளை தெரு, நடேசன் தெரு, போக்கர் தெரு, வெங்கடாசல முதலி தெரு, மேடக்ஸ் தெரு, ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி அவர் வாக்கு சேகரித்தார்.அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.