மாவட்ட செய்திகள்

மராட்டிய அரசை ‘புல்டோசர் அரசாங்கம்’ என விமர்சித்த அம்ருதா பட்னாவிஸ்

மராட்டிய அரசை புல்டோசர் அரசாங்கம் என அம்ருதா பட்னாவிஸ் விமர்சித்து உள்ளார்.

மும்பை,

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். இவர் பல்வேறு விவகாரங்களில் மாநில அரசை விமர்சித்து கருத்து கூறி வருகிறார். சமீபத்தில் கூட கோவில்களை திறக்கும் விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து பேசிய சிவசேனா பெண் பிரமுகர் ஒருவர், சிவசேனா தலைவர்கள் பேசினால், அவர் எங்கே போய் ஒளிந்து கொள்வது என தொயாமல் தவிப்பார் என கூறினார்.

புல்டோசர் அரசாங்கம்

சிவசேனா பெண் தலைவரின் பேச்சு குறித்து அம்ருதா பட்னாவிஸ் கூறுகையில், எனக்கு வீடு இல்லை. எனவே இந்த புல்டோசர் அரசாங்கத்தால் என்னை என்ன செய்து விட முடியும் என கூறியுள்ளார்.

சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறிய நடிகை கங்கனாவின் பங்களா வீட்டின் ஒரு பகுதி புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. எனவே தான் அம்ருதா மாநில அரசை புல்டோசர் அரசாங்கம் என விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...