சென்னை,
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் புதிதாக ஆவின் பால் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை முறைப்படி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, சட்டசபை தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறேன். பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றிய ஆய்வு நடந்து வருகிறது. ரவுடிகள் கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், இணை கமிஷனர் மல்லிகா மற்றும் போலீஸ் அதிகாரிகளும், ஆவின் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.