மாவட்ட செய்திகள்

ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது

ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வட்ட வழங்கல் அலுவலர் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது.

தினத்தந்தி

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுருளிவேல் உள்ளிட்ட குழுவினர் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் வந்தனர். அவர்கள் அங்குள்ள வட்ட வழங்கல் அலுவலர் அறைக் குள் சென்று திடீர் சோதனை நடத்தினர். அவர்களுடன் மதுரையில் இருந்து வந்த ஆய்வுக்குழு அலுவலர்களும் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் பலர் வந்திருந்தனர். அவர் களிடமும் விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை பார்வையிட்டு மேஜைகள், பீரோ போன்றவற்றை திறந்து சோதனை நடத்தினர்.

இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. அந்த பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சோதனை மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. அதன்பின்னர் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலனிடம் கேட்டபோது, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்த ரகசிய புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கணக்கில் வராத ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும், வட்ட வழங்கல் அலுவலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தப்படும். இதுகுறித்து துறை வாரியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை