மாவட்ட செய்திகள்

3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

கன்னியாகுமரி இரட்டை கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி இரட்டை கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இரட்டை கொலை

கன்னியாகுமரி முருகன் குன்றம் நான்கு வழிச்சாலை அருகே சுவாமிநாத புரத்தை சேர்ந்த ஜேசுராஜ் (வயது 24) என்பவரும், வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த செல்வின் (24) என்பவரும் 24-6-2021 அன்று கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை வழக்கில் அகஸ்தீஸ்வரம் சாமிகோவில் தெருவை சேர்ந்த பாகீஸ்வரன் (21), உச்சினிமாகாளி காவில் தெருவை சேர்ந்த முத்துகுமார்(22) நடுத்தெருவை சேர்ந்த ராஜேஸ்வரன்(27) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

3 பேர் மீதும் கஞ்சா வழக்குகளும் இருந்தன. அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்று பாகீஸ்வரன், முத்துகுமார், ராஜஸ்வரன்ஆகிய 3 பேர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்