மாவட்ட செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த பெண் சாவு - டாக்டரை மிரட்டி ஆஸ்பத்திரி கண்ணாடிகளை நொறுக்கிய நபருக்கு வலைவீச்சு

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த பெண் பரிதாபமாக இறந்தார். டாக்டரை மிரட்டி ஆஸ்பத்திரி கண்ணாடிகளை நொறுக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் டாக்டர் நரேந்திர பாபு பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த சுகுணா தேவி தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருப்பதாக கூறி சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் நரேந்திரபாபு அவருக்கு உரிய சிகிச்சை அளித்தார். இருப்பினும் சுகுணா தேவி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

இதை அறிந்த அவரது உறவினரான வினோத் என்பவர் பணியில் இருந்த டாக்டர் நரேந்திர பாபுவை தகாத வார்த்தையால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் ஆஸ்பத்திரியின் ஜன்னல் கண்ணாடிகளை நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜ்குமார் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரி ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி டாக்டருக்கு மிரட்டல் விடுத்து தலைமறைவாக உள்ள வினோத் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்