மாவட்ட செய்திகள்

விபசார விடுதியில் இருந்து மீட்கப்பட்ட, சிறுமிகளை மீண்டும் விபசார கும்பலிடமே விற்ற முன்னாள் போலீஸ் அதிகாரி கைது

விபசாரத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகளை மீண்டும் விபசார கும்பலிடமே விற்பனை செய்த முன்னாள் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மும்பை நாக்பாடாவில் சீனியர் இன்ஸ்பெக்டராக இருந்தவர் குவாலந்தர் சேக்(வயது68). இவர் தற்போது அவுரங்காபாத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு நாக்பாடாவில் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தபோது கமாத்திபுரா விபசார விடுதியில் சோதனை நடத்தி அங்கு இருந்து 3 சிறுமிகளை மீட்டுள்ளார்.

ஆனால் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த சிறுமிகளை காப்பகத்தில் ஒப்படைக்காமல் ரவீந்திர பாண்டே(60) என்ற தரகர் மூலமாக மீண்டும் விபசார கும்பலிடம் விற்பனை செய்து உள்ளார். இந்தநிலையில் அவர் கடந்த 2007-ம் ஆண்டு பணி ஓய்வுபெற்றுவிட்டார்.

இந்தநிலையில் ஓய்வுபெற்ற சீனியர் இன்ஸ்பெக்டர் குவாலந்தர் சேக்கால் விற்பனை செய்யப்பட்ட சிறுமி ஒருவள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட போது சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கினாள். அப்போது அவள் விபசாரத்தில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டரால் விபசார கும்பலிடம் விற்பனை செய்யப்பட்ட அவலம் குறித்து போலீசாரிடம் கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கடந்த சனிக்கிழமை அவுரங்காபாத்தில் வைத்து ஓய்வுபெற்ற சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குவாலந்தர் சேக் மற்றும் மும்பையில் வைத்து விபசார தரகர் ரவீந்திர பாண்டேயையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...