மாவட்ட செய்திகள்

நாமகிரிப்பேட்டை அருகே பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

நாமகிரிப்பேட்டை அருகே பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலக்குறிச்சி கிராமத்தில் காமராஜ் நகரில் மலைக்குறவர் மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜ் நகர் கிளை பா.ஜனதா தலைவர் உமா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, பொது சுகாதார வளாகம் கேட்டும், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் லோகேந்திரன், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் சிவகுமார், காளியப்பன், சுகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...