மாவட்ட செய்திகள்

ரத்ததான முகாம்

குடவாசல் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.

குடவாசல்:

குடவாசல் டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணி திட்டம், செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் வழிகாட்டுதல்படி நடைபெற்ற இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் மாரிமுத்து தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் ரத்த வங்கி அலுவலர் பிரீத்தா மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டு பேராசிரியர்கள் மகேந்திரன் உள்ளிட்ட 50 மாணவர்களிடம் ரத்ததானத்தை பெற்றனர். முகாமில் மாவட்ட யூத்ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் பெஞ்சமின், திட்ட அலுவலர் தேஸ், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரமேஷ்குமார், செஞ்சுருள் சங்கம் திட்ட அலுவலர் சுரேஷ் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் புலவேந்திரன் நன்றி கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...