மாவட்ட செய்திகள்

பெருங்குளம் மாயக்கூத்தர் கோவிலில் தெப்ப திருவிழா

பெருங்குளம் மாயக்கூத்தர் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது.

ஏரல்:

ஏரல் அருகே உள்ள பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், நவதிருப்பதிகளில் 6-வது தலமாகும். இந்த கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாயகூத்தர் தெப்ப உற்சவம் நடந்தது. மாயக்கூத்தர், குழந்தை வள்ளி தாயார், அலமேலு தாயார் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் சிவலோக நாயகி, அரையர் சாமி, ஆத்தான் ராமானுஜர்சாமி, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, அர்ச்சகர்கள் வெங்கடேசன், சுந்தரர் பட்டர், அஸ்வின் பிச்சைமணி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.