ஜல்லிபட்டியில் நிறுத்தம் செய்யப்பட்ட பொக்லைன்களை படத்தில் காணலாம் 
மாவட்ட செய்திகள்

பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வைகண்டித்து சுல்தான்பேட்டை, ஜல்லிபட்டியில் பொக்லைன் எந்திர உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது.

தினத்தந்தி

சுல்தான்பேட்டை,

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை,ஜல்லிப்பட்டி திருப்பூர் மாவட்டம் புத்தெரிச்சல் ஆகிய பகுதிகளில் 150-க்கும் மேற்பட்டபொக்லைன் (ஜே.சி.பி.) உள்ளன. பொக்லைன் நிலத்தில் உள்ள செடி, கொடி, மரங்களைஅகற்றி சுத்தப்படுத்துதல், குழிகள் தோண்டுதல்என பல பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பொக்லைன் இயக்க டீசல் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில்,தற்போது டீசல், பொக்லைன் உதிரிபாகங்கள் விலை கடுமையாக உயந்து உள்ளதோடு இன்சூரன்ஸ் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொக்லைன்உரிமையாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிய உள்ளனர்.

இதன் எதிரொலியாக நேற்றுசுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, புத்தெரிச்சல்பகுதியில் உள்ள 100-க்குமேற்பட்ட பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் தங்கள் பொக்லைனை நிறுத்தி 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சுல்தான்பேட்டை, ஜல்லிபட்டி, புத்தெரிச்சலில்தங்கள் வாகனத்தை ஒரே இடத்தில்நிறுத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அரசு டீசல், உதிரி பாகங்கள் விலையை குறைக்கவேண்டும் என வலியுறுத்தும் அடையாளமாக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக பொக்லைன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொக்லைன் உரிமையாளர் சுல்தான்பேட்டை கனகராஜ், ஜல்லிபட்டி ஜோதிராஜ் ஆகியோர் கூறுகையில்,

டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த பின்னரும் குறைவான பழைய விலைக்கு பொக்லைன்வாடகைக்கு விடப்பட்டு வந்தது. தற்போது டீசல் விலைமிகவும் அதிகரித்துள்ள காரணத்தால்பொக்லைன் புதிய வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

அதேபோல், பொக்லைன் உதிரிபாகங்கள் விலையை குறைக்க அரசு நடவடிக்கைவேண்டும் என்பதை பொது மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும், அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாகவும் இந்த அடையாள வேலைநிறுத்தத்தை நடத்துகிறோம் என்றனர்.

இதேபோல் சூலூர், பல்லடம், திருப்பூர், உடுமலை,பொள்ளாச்சி பகுதிகளிலும் இன்று முதல் போராட்டம் நடத்த பொக்லைன் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் போராட்டம் காரணமாக சுமார் ரூ.ஒரு கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்க படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒரு மணிநேரத்திற்கு ரூ.900-க்கு விடப்பட்டு வந்த பொக்லைன் வாடகைஇனி குறைந்தபட்சமாக ரூ.ஆயிரத்து 200 எனஉயரும் வாய்ப்பு உள்ளதாக சில பொக்லைன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை