மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டையில் குண்டும்-குழியுமான சாலையால் மக்கள் அவதி சீரமைக்க கோரிக்கை

பட்டுக்கோட்டை-நாடியம்மன் கோவில் செல்லும் சாலை குண்டும்- குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. மேடு- பள்ளமான சாலையில் நிலை தடுமாறி விழுந்து காயமடைகிறார்கள். மழை பெய்தால் மழை நீர் பள்ளத்தில் தேங்கி மக்கள் அவதிப்படுகின்றனர்.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. பட்டுக்கோட்டை-நாடியம்மன் கோவில் செல்லும் சாலை குண்டும்- குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இந்த பகுதியில் தான் பஸ்நிலையம், அலுவலகம், உணவகம் ஆகியவை உள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மேடு- பள்ளமான சாலையில் நிலை தடுமாறி விழுந்து காயமடைகிறார்கள். மழை பெய்தால் மழை நீர் பள்ளத்தில் தேங்கி மக்கள் அவதிப்படுகின்றனர்.

அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார்கள். மேலும் பஸ் நிலையம் அருகே திறந்த நிலையில் சாக்கடை கால்வாய் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் சாக்கடை கால்வாய் இருப்பது தெரியாமல் பலர் விழுந்து விடுகின்றனர்.

இதைப்போல மாதாகோவில் தெரு, அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள சாலை, அந்தோணியார் கோவில் தெரு மற்றும் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும்- குழியுமாகவே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும்- குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...