மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

ஈரோட்டில் காவி ஆற்றில் மூழ்கி சிறுவன் பாதாபமாக இறந்தான்.

தினத்தந்தி

சிறுவன்

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஏ.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் நந்தகோபால் (வயது 15). 5-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் நந்தகோபால் ஈரோடு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வைராபாளையம் பகுதிக்கு சென்றார்.

ஆற்றில் மூழ்கி சாவு

பின்னர் அவர் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டு இருந்தார். அப்போது நந்தகோபால் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நந்தகோபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை