மாவட்ட செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து திருட்டு

வீட்டின் கதவை உடைத்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பண்ருட்டி,

பண்ருட்டி எல்.என்.புரத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 45). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். இதைநோட்ட மிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.