மாவட்ட செய்திகள்

தனது கட்சி வேட்பாளர் போட்டியிடாத வார்டில் ஓட்டுப்போட்ட சரத்பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மும்பை, புலாபாய் தேசாய் ரோடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று 214-வது வார்டு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

மும்பை,

சரத்பவாருடன் அவரது மருமகன் சதானந்த சுலே மற்றும் பேத்தி ரேவதியும் வந்து தங்கள் ஓட்டை பதிவு செய்தனர். இதில், ஆச்சரியம் என்னவென்றால் சரத்பவார் ஓட்டுப்போட்ட வார்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. 214-வது வார்டில் சிவசேனா சார்பில் அரவிந்த் பானே, நவநிர்மாண்சேனா சார்பில் தன்ராஜ் சகாதேவ், காங்கிரஸ் சார்பில் கவுசிக் ஜாசுபாய், பா.ஜனதா சார்பில் சரிதா அஜய் பாட்டீல் ஆகியோர் உள்ளிட்ட 9 பேர் போட்டியிடுகின்றனர்.