மாவட்ட செய்திகள்

சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்

ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது.

தினத்தந்தி

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த அம்பிளிக்கை அருகே ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்த கார் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த காரில் வந்தவர் லேசான காயத்துடன் அங்கு கிடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அம்பிளிக்கை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஒட்டி வந்தவர், கோவையை சேர்ந்த தேவசேனாமூர்த்தி (வயது 40) என்றும், அவர் கோவையில் இருந்து காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கவிழ்ந்து கிடந்த காரை அகற்றி, போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை