மதுரை,மே
கொரோனா முழு ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்துக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ-பதிவு அவசியம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட எல்லை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். யாரேனும் இ-பதிவு இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கிறார்களா என்பது குறித்து போலீசார் நேற்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இரவு 10 மணி நிலவரப்படி இ-பதிவு இல்லாமல் பயணம் செய்த 111 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.