மாவட்ட செய்திகள்

அரூர் அருகே இரிடியம் தருவதாக கூறி பண மோசடி

அரூர் அருகே இரிடியம் தருவதாக கூறி பண மோசடி; 2 பேர் கைது.

அரூர்,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 45). இவர் அரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரெட்டிப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பழனி, அரூர் பகுதியை சேர்ந்த முருகேசன் மற்றும் மேலும் மூவர் சேர்ந்து இரிடியம் சொம்பு தருவதாக கூறி ரூ.10 லட்சம் பேரம் பேசி கடந்த 4-ந் தேதி அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடில் வைத்து ரூ.5 லட்சம் முன்பணம் பெற்று கொண்டு, ஒரு வாரத்தில் இரிடியம் தருவதாக கூறினர். ஆனால் தராமல் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து பழனி (37). முருகேசன் (48) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை மீட்டு அரூர் கோர்ட்டில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...