மாவட்ட செய்திகள்

சூளைமேடு பிரகதீஸ்வரர் காலனியில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேக்கம் தொற்றுநோய் அபாயம்

மழைநீர் கால்வாயில் தற்போது கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனை சரிசெய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி மண்டலத்துக்குட்பட்ட (மண்டலம்-9) சூளைமேடு பிரகதீஸ்வரர் காலனி 2-வது தெரு சந்திப்பில் சாலையை துண்டித்து, மழைநீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மழைநீர் கால்வாயில் தற்போது கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனை சரிசெய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி வருவதால் கொசுக்கள் பெருகுகின்றன. இதனால் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாங்கள் பீதியில் இருக்கிறோம். தவிர சாலை துண்டிக்கப்பட்டிருப்பதால் அருகில் உள்ள தெருக்களுக்கு செல்வது சவாலாக இருக்கிறது. எனவே நோய் அபாயம் ஏற்படும் முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றி, மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவேண்டும், என்றனர்.

அதேவேளையில் அதே தெருவில் சாலையோரம் உள்ள ஒரு மரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. மரத்தின் பட்டைகள் உதிர்ந்து எந்த நேரத்திலும் சாய்ந்து விடும் அபாயம் நிலவுகிறது. எனவே விபரீதம் ஏற்படும் முன்னர் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து அந்த மரத்தை அகற்றவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை