மாவட்ட செய்திகள்

புதுச்சேரி அரசு இணையதள பக்கத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி படம் பதிவேற்றம்

புதுச்சேரி அரசின் இணையதளத்தில் மாநில நிர்வாகியான கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் துறைத்தலைவர்கள் படம் இடம் பெற்றிருக்கும்.

அதன்படி புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் படம் இடம் பெற்றிருந்தது. இதற்கிடையே புதுவையில் காங்கிரஸ் அரசின் ஆட்சி கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதால் அரசு இணையதள பக்கத்தில் நாராயணசாமியின் படம் நீக்கப்பப்பட்டது.

புதுவையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதன்படி புதுச்சேரியின் முதல்-அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி நேற்று முதல்-அமைச்சராக பதவியேற்று கொண்டார். அதைத்தொடர்ந்து புதுவை அரசின் இணையதள பக்கங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமி படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...