கோவை,
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 11 கிலோ லிட்டர் திரவ கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் டேங்க், கொரோ னா பின்கவனிப்பு பிரிவு, செவிலியர் விடுதியில் 132 படுக்கை வசதியுடன் கூடிய கூடுதல் கொரோனா சிகிச்சை பிரிவு, தானியங்கி ஆர்.என்.ஏ. பிரித்தெடுக்கும் கருவி ஆகியவற்றை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் ராஜாமணி, அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், இ.எஸ்.ஐ. மருத்துவ மருத்துவமனை டீன் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-
பிரசவத்தின் போது பெண்கள், பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக குறைவாக உள்ளது. தமிழகத்தின் பல்வேறு சுகாதாரத் திட்டங்களை உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு பாராட்டி உள்ளது. கோவை மாவட்டத்திற்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து சுமார் 10 சதவீதம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரத்யேக சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டது. இது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் 2-வது பெரிய மருத்துவமனை ஆகும்.
எனவே இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் சிதிலடைந்திருந்த நிர்வாக அலுவலகம் ரூ.35 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு 80 நோயாளிகள் பயன டையும் வகையில் ஆக்ஸிஐன் மற்றும் பிற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. செவிலியர் விடுதி ரூ.2 கோடியில் புரனமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஏற்கனவே 450 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது 215 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு மொத்தம் 655 படுக்கை வசதிகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தயார் நிலையில் உள்ளது.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் பி.சி.ஆர். பரிசோதனை மையத்தில் ரூ.27 லட்சத்தில் தானியங்கி ஆர்.என்.ஏ. பிரித்தெடுக்கும் எந்திரம் நிறுவப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 1,500 மாதிரிகளை பரிசோதனை செய்ய ஏதுவாக இருக்கும். நுரையீரல் தொற்றுடன் வரும் கொரோனா நோயாளிகளுக்காக ரூ.52 லட்சத்தில் 11 கிலோ லிட்டர் ஆக்ஸிஐன் சிலிண்டர் நிறுவப்பட்டுள்ளது. அதிக நுரையீரல் தொற்றுடன் வருபவர்களுக்கு தகுந்த சிகிச் சை அளிக்க இயலும்.
இங்கு 8,100 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அதில் 7,550 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோ னா தொற்றுடைய 761 குழந்தைகள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரேனா தொற்றுடைய 194 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். கொரோ னா காலத்தில் இருந்து 175 மருத்துவர்களும், 205 செவிலியர்களும், இதர பணியாளர்கள் என சுமார் 410 பேர் மற்றும் கடைநிலை ஊழியர்கள் 150 பேர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.