மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு வெட்டு: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது

கல்லூரி மாணவர்களுக்கு வெட்டு: கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது

மீஞ்சூர்

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த நவீன் (வயது 20) சென்னை மாநிலக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 21ந்தேதி கல்லூரி முடிந்து வீட்டுக்கு மின்சார ரெயிலில் புதுநகர் ரெயில் நிலையத்தில் வரும்போது 15 பேர் கொண்ட கும்பல் நவீனை அரிவாளால் வெட்டியது.

ஏற்கனவே அந்த கும்பல் கத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் அதே கல்லூரியை சேர்ந்த அஜய் (19) என்ற மாணவரை அரிவாளால் வெட்டி உள்ளது. அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் 2 பேரை முன்விரோதத்தில் வெட்டியது சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான புருஷோத்தமன் (19), சரவணன் (18), அன்பரசு (22), சதீஷ்குமார் (18), மலைவாசன் (21), ஆதித்தியன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.