கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள ஆர்.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சர்மிளா (வயது 18). பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 1-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த சர்மிளா, வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.