மாவட்ட செய்திகள்

ஜமீன் பல்லாவரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

ஜமீன் பல்லாவரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் பள்ளியக்ரகாரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சடகோப ராமானுஜம். இவரது மகள் பவித்ரா (வயது 19). இவர் ஜமீன் பல்லாவரம், வேம்புலி நகர், 3-வது தெருவில் உள்ள 2 மாணவிகளுடன் தங்கி, அங்குள்ள கல்லூரியில் பி.பார்ம் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் படிப்பதற்காக படுக்கை அறைக்கு சென்ற பவித்ரா நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த உடன் தங்கியிருந்த மாணவிகள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது பவித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டு அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி ரேகா (வயது 40). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 24-ந் தேதி, ரேகா மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...