மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்பு - மேலும் 2 ரவுடிகள் கைது

ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடைய மேலும் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம்,

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள ஒருவருடைய வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த வீட்டிற்குள் சென்ற போலீசார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வேலுசாமி, யுகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, பிரபல ரவுடி செல்லதுரை, ரேஷன் அரிசியை அந்த வீட்டில் பதுக்கி வைத்து இருந்ததும், கிச்சிப்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை அவர் தலைமையிலான ரவுடி கும்பல் ஆந்திராவுக்கு அடிக்கடி கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இந்த கடத்தல் தொடர்பாக செல்லதுரை மற்றும் அவருடைய கூட்டாளிகளான கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சலீம், சரவணன் மற்றும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் ரவுடிகளான சலீம் (வயது 25), சரவணன்(26) ஆகிய 2 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி கைது செய்தார்.

தலைமறைவாக உள்ள செல்லதுரையை போலீசார் தேடி வருகின்றனர். இவரை கைது செய்தால் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...