905 பேருக்கு கொரோனா
கொரோனா வைரசின் 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, கோவைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த 10 நாட்களாக 600-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 905 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரையில் மாவட்டம் முழுவதும் 59 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 53 ஆயிரத்து 345 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 5 ஆயிரத்து 564 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 7 பேர் இறந்து உள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 793 ஆக உயர்ந்துள்ளது.