நாமக்கல்:
239 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 55 ஆயிரத்து 872 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்து 873 ஆக அதிகரித்தது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 112 ஆக அதிகரித்து உள்ளது.
1,216 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் 53 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 54 ஆயிரத்து 374 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 522 பேர் உயிரிழந்த நிலையில் 1,216 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு 56 ஆயிரத்தை தாண்டி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.