திருச்செந்தூர், மே.19-
திருச்செந்தூர் போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடையே கொரானா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ரவுண்டானா மற்றும் பகத்சிங் பஸ் நிலையம் முன்பும் சாலையில் மிகப்பெரிய கொரோனா வைரஸ் ஓவியம் வரைந்துள்ளனர். மேலும் ஓவியத்தின் அருகில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் கலந்து கொண்டு பேசுகையில், நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நமது நகரில் சாலையில் இந்த ஓவியம் வரைந்துள்ளோம். கொரானாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போடுங்கள். வெளியில் வரும்போது சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். அனைவரும் முககவசம் அணிய வேண்டும். தேவையில்லாமல் வீட்டில் இருந்து யாரும் வெளியில் வரவேண்டாம் என்றார்.
நிகழ்ச்சியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.