மாவட்ட செய்திகள்

கோவையில் புதிதாக 223 பேருக்கு கொரோனா

கோவையில் புதிதாக 223 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கோவை

கோவையில் நேற்று முன்தினம் 236 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று புதிதாக 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 575 ஆக உயர்ந்து உள்ளது.

கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 197 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 27 ஆயிரத்து 978 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2,380 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது பெண், 75 வயது மூதாட்டி, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது பெண், 67 வயது ஆண், 51 வயது ஆண் ஆகிய 5 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,217 ஆக உயர்ந்து உள்ளது.