மாவட்ட செய்திகள்

புதிதாக 3 பேருக்கு கொரோனா

மாவட்டங்களில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 17 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 13 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.