மாவட்ட செய்திகள்

புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 909 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 419 பேராக உள்ளது.