மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சமுதாய கூட வளாகத்தில் நடைபெற்றது.

இதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிமுரளி தலைமை தாங்கினார். எல்லாபுரம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்கம்முரளி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி கலந்துகொண்டு தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பேசினார். இதில், பெரியபாளையம் வட்டார அரசு மேம்படுத்தப்பட்ட ஆஸ்பத்திரி டாக்டர் பிரபாகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெகநாதலு, சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணி, நித்தியா மற்றும் பலர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தினர். இதில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வி.ஜே.சீனிவாசன், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பாஸ்கர், ஆயிலச்சேரி ரகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஊராட்சி செயலர் குமார் நன்றி கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...